கோவை: யோகாவை உலகறியச் செய்த பிரதமருக்கு திவாகர் நன்றி

வாட்டர் மிலன் ஸ்டார் என அழைக்கப்படும் யூடியூப் பிரபலமும் பிசியோதெரபி மருத்துவருமான திவாகர், யோகாவை உலகமெங்கும் கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வாட்டர் மிலன் ஸ்டார் என அழைக்கப்படும் யூடியூப் பிரபலமும் பிசியோதெரபி மருத்துவருமான திவாகர், யோகாவை உலகமெங்கும் கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். கருமத்தம்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திவாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் முயற்சியால்தான் யோகா இன்று உலகமெங்கும் பரவியுள்ளது என்றார். யோகா துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களை கவுரவிக்கும் விதமாக சர்வதேச யோகா தினத்தன்று இரண்டு புதிய விருதுகளை பிரதமர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், பிசியோதெரபி மருத்துவப் படிப்பில் யோகாவை ஒரு பாடத்திட்டமாக கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் அனைவரும் யோகாசனம் செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் திவாகர் தெரிவித்தார். நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
Next Story