பொய்யான காரணங்களை கூறி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

பொய்யான காரணங்களை கூறி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
X
வட்டார வளர்ச்சி அலுவலர்களை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை ஒன்றியம் அகலங்கன் ஊராட்சி செயலாளரும், அகர ஒரத்தூர் கூடுதல் பொறுப்பு ஊராட்சி செயலாளருமான எஸ்.கௌசல்யா என்பவரின் மீது பொய்யான காரணங்களை கூறி, சஸ்பெண்ட் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் ப.குமார், வேண்டும் என்றே பத்து நாட்கள் ஊதியம் வழங்காமல் இருக்க பொய்யான குற்றச்சாட்டுகளை ஏற்படுத்த காரணமாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியை கண்டித்தும், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலர்களை கண்டித்தும், கௌசல்யா மீது புனையப்பட்ட பொய்யான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாகை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ரஜினி எஸ்.கருணாநிதி முன்னிலை வைத்தார். திருவாரூர் மாவட்ட தலைவர் தங்கத்துரை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், மாநில பொது செயலாளர் வேல்முருகன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில மகளிர் அணி செயலாளர் எஸ்.கௌசல்யா, மாநில பொருளாளர் மகேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன், வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் கண்டித்து பேசினர். மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சிறப்புரையாற்றினார். முடிவில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.
Next Story