மருத்துவமனையில் தகராறு - வழக்கு

மருத்துவமனையில் தகராறு - வழக்கு
X
மார்த்தாண்டம்
மார்த்தாண்டத்தில் உள்ள மெயின் ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்றிரவு வள்ளவிளை என்ற  பகுதியை சேர்ந்த சாம் மற்றும் 3 பேர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வரவேற்பறையில் இருந்த ஊழியரிடம் சூர்யா என்பவருடைய மருத்துவ அறிக்கை வேண்டுமென கேட்டு தகாத வார்த்தைகள் பேசி தகராறில்  ஈடுபட்டனர்.       அப்போது இதனை பார்த்து தட்டி கேட்ட  மற்றொரு பெண் ஊழியரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ரகளை ஈடுபட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து மருத்துவமனை மேலாளர் தினகர் (40) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்  சாம் மற்றும் கண்டால் தெரியும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story