செஞ்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் மாயம்

X
செஞ்சி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 47; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், கடந்த 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை அவரது அண்ணன் சகாயராஜ் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

