ராமநாதபுரம் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நூற்றாண்டு விழா நடைபெற்றது

ராமநாதபுரம் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நூற்றாண்டு விழா நடைபெற்றது
X
கமுதியில் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.ஆர்.பெருமாள் தேவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஏ.ஆர்.பெருமாள்தேவரின் நூறாவது பிறந்தநாள் விழா அக்கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி தலைமையில், ஏ.ஆர்.பெருமாள்தேவரின் பேரன் ஏ.ஆர்.பி.ராமுத்தேவர், மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந.மூக்கூரான், முன்னாள் செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏ.ஆர்.பெருமாள்தேவரின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து, இனிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் மாணவர்கள் செங்கம் நடத்தும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், நோட்டு வழங்கப்பட்டு. முத்துராமலிங்கத் தேவரின் தொண்டராகச் செயல்பட்டு, பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்து, 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் சுதந்திராக் கட்சி மற்றும் பார்வார்டு பிளாக் கட்சிகளின் வேட்பாளராக காரியாப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்விழாவில் கல்லூரின் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பொறியாளர் கண்ணன், ஆண்டவன் திரைப்பட கதாநாயகன் மகúஷ்வரன், பகவதி அறக்கடளை தலைவர் வெள்ளைப்பாண்டியன், இலவச பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் சங்கத்தின் பொருளாளர் முத்துக் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Next Story