கிளியனூர் பகுதியில் திடீர் மழையில் நெற்பயிர் சேதம்

X
கிளியனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நவரை பருவத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். நெற்கதிர் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரானது.இந்நிலையில் நேற்று கிளியனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தததால், விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்தது.இதன் காரணமாக கிளியனுார் அடுத்த நல்லாவூரில் 15க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story

