கோவை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் !

கோவை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் !
X
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கருமத்தம்பட்டி நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கருமத்தம்பட்டி நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. கருமத்தம்பட்டி நகர தவெக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கண் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த மருத்துவ முகாமை கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு அவர்கள் துவக்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த முன்னெடுப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Next Story