தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் கடந்த 5ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருமங்கலம் பேருந்து நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத ஒரு நிலை உள்ளது. மேலும் பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்ப முடியாத நிலையில் ஓட்டுநர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (மே.19)திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, சகதி அதிகமாக இருந்த பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஈடுபட்டார் .தொடர்ந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டார்.
Next Story



