குத்துச்சண்டை பயிற்சி முகாம் அறிவிப்பு

X
மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகமும்,கோல்டன் ஆர்மி குத்துச்சண்டை அகாடமியும் இணைந்து நடத்தும், 19ம் ஆண்டு இலவச குத்துச்சண்டை பயிற்சி முகாம்,20-5-25 முதல் 30-5-25 வரை, எம்.ஜி,ஆர் விளையாட்டு அரங்கில், (ரேஸ் கோர்ஸ்) நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில், கலந்து கொள்ள, ஆண்-பெண் இரு பாலருக்கும், வயது வரம்பு 10 முதல் 35 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி முகாமில், சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களைத் தேர்வு செய்து, மாவட்ட, மாநில போட்டிகளில், பங்குகொள்ள வைத்து, தேசிய போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடி, மத்திய, மாநில அரசு பணி பெற்று, நல்வாழ்வை அமைத்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமின் தலைமை பயிற்சியாளர் எம்.ரமேஷ், உதவி பயிற்சியாளர் கிரிதரன் ஆகியோர் பயிற்சி அளிப்பார்கள் என மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் இராவணன் அவர்களும், செயலாளர் செழியன், நிர்வாக செயலாளர் அழகு ராஜன், பொருளாளர் பாக்ஸர் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர். பயிற்சி நடைபெறும் இடம்- ரேஸ்கோர்ஸ் குத்துச்சண்டை வளாகம், நேரம்-காலை 6 மணி முதல் 8-30 மணி வரை, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9381454545,9025566033, 8098092510, 7708899955.
Next Story

