தங்க தேர் இழுத்து வழிபட்ட அதிமுகவினர்

X
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.எல்.ஏ வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே .தமிழரசன் தலைமையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் முன்னிலையில் மேலூர் அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து செங்கோல் ஏந்தி கோவிலை சுற்றி நேற்று (மே.18) தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். அனைவருக்கும் இனிப்பு பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், சுண்டல் பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கினர். விழாவில் மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் வழக்கறிஞர் பொன் ராஜேந்திரன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் விஷ்ணுவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் அன்புச்செல்வன், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிடாரிப்பட்டி சுரேஷ்,அ.வலையபட்டி வெள்ளைச்சாமி, திருவாதவூர் இளவரசன், உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

