சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து

X
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு ரவுண்ட்ரோடு புதூர், எஸ் எம் பி எம் பள்ளி, ஜி டி என் சாலை, லட்சுமி சுந்தரம் காலனி, ஆண்டாள் நகர், ரங்கநாயகி நகர், சிவா நகர், எம் எஸ் பி டீச்சர்ஸ் காலனி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை தண்ணீர் அரசன் நகர் மற்றும் ஜிடிஎன் சாலை வழியாகவே வருகிறது. அவ்வப்போது சிறிய மழை பெய்தால் கூட பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது. இந்த பாதாள சாக்கடையின் அடைப்பை சரி செய்ய கோரிக்கை வைத்து பலமுறை திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பாதாள சாக்கடை நீர் இந்த பகுதிகளில் வீடுகளில் சூழ்ந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றை பரப்பி வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் பல்வேறு குளிருப்பு வாசிகள் வீட்டை காலி செய்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பாதாள சாக்கடை அடைப்பை போர்க்கால அடிப்படையில் சரி செய்து நோய் தொற்றை பரவாமல் தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இடம் மனு அளித்தனர்.
Next Story

