பிள்ளையார் கோவில் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு.
பிள்ளையார் கோவில் அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கே.பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வயது 32. இவரது வீட்டின் அருகாமையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே மே 15ஆம் தேதி இரவு ஒரு மணி அளவில் நடந்து வந்த போது பாம்பு கடித்து உள்ளது. இதனால் கூச்சலிட்டதை கண்டு அவரது சகோதரர் ரத்தினம் வயது 57 என்பவர் உதவிக்கு வந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையிலிருந்து வந்த அவர் மே 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினம், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல் துறையினர்.
Next Story




