தஞ்சாவூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிறப்பு பேரவை

X
நவீன பாசிசத்தை முறியடிக்க, இளைஞர்களை அணி திரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், தஞ்சை மாவட்ட சிறப்பு பேரவை, தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் சரோஜ் நினைவகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே. அருளரசன் தலைமை வகித்தார். தஞ்சை மாநகரக் குழு உறுப்பினர் எம்.நாகராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா, எதிர்காலப் பணிகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஏ.வி சிங்காரவேலன் நிறைவுறையாற்றினார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கு.தமிழினியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உ.சரவணன், கி.பிரேம்நாத், பி.கரன்குமார், இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வே.அர்ஜூன், மாணவர் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் வசந்த், மாவட்ட செயலாளர் ஹரிஷ் மற்றும் வாலிபர் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர். போதை கலாச்சாரத்தை ஒழித்து, இளைஞர்களை மீட்டெடுக்க, தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

