வேலூர் தாலுகாக்களில் ஜமாபந்தி!

X
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில், 1434-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி வரும் மே 21ஆம் தேதி தொடங்குகிறது. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமையை தவிர்த்த மற்ற நாட்களில் ஜமா பந்தி நடைபெற உள்ளது. ஜமாபந்தியில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள் வருவாய் தீர்வாய அலுவலரால் பெறப்படும் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

