மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம், சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரது பசு வழக்கம்போல் மேய்ச்சலுக்காக எல்.ஆர் நகர் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது அங்குள்ள கைப்பேசி கோபுரத்துக்கு செல்லும் மின்இணைப்பு கம்பியின் மின்மாற்றி மீது உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்து பசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Next Story

