மகராஜகடை: அனுமதியின்றி எருது விடும் விழா- மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகேயுள்ள எம்.சி.பள்ளி இங்கு தக்கேப்பள்ளி சாலையில் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியில் அனுமதி இன்றி எருதுவிடும் விழா நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக எருது விடும் விழா நடத்திய அந்த பகு தியை சேர்ந்த முரளி (36) பாலசந்தர் (35) சாம்ராஜ் (40) ஆகிய மூன்றுபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

