பர்கூர்:மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது

பர்கூர்:மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது
X
பர்கூர்:மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகேயுள்ள மல்லப்பாடி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி சரோஜா (75) இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 29.03.25 அன்று மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில் மல்லப்பாடி அருகே உள்ள நாடார் கொட்டாய்யை சேர்ந்த வடிவேல் மகன் அரவிந்தன் (21) என்பவர் சரோஜாயின் தங்கச்சங்கிலியை பறித்து சென்றது. தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் சங்கிலி மற்றம் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story