ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது

ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது
X
மணலிக்கரை
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலிக் கரை பகுதி சேர்ந்தவர் ஜிண்டோ (29) இவர் ஒலி ஒலி அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். மணலிக்கரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழா முடிந்த பின்பு மின்விளக்குகள், ஒயர் உள்ளிட்ட சில பொருட்களை ஆலயத்தின் ஒரு பகுதியில் ஒதுக்குப்புறமாக வைத்திருந்தார். பின்னர் அந்த பொருட்களை எடுக்க சென்றபோது அங்கு வைத்திருந்த 100 செட்டு சீரியல், மின்விளக்கு போன்றவற்றை காணவில்லை. அவற்றை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.        இது குறித்தது ஜிண்டோ கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.       அப்போது திருவட்டாறு அருகே உள்ள செங்கோடியை சேர்ந்த விஜி (38) என்பவர் மின்விளக்குகளை திருடி சென்றது தெரியவந்தது. இவரும் ஒளி ஒலி நிலையம் நடத்தி வருகிறார். இதை அடுத்து விஜியை போலீசார் கைது செய்து அவர் திருடி சென்ற பொருட்களை மீட்டனர்.
Next Story