ஸ்காலர்ஷிப் வாங்கித் தருவதாக மோசடி

X
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, தம்பிதோட்டம் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வந்திருப்பதாக மர்ம நபர் மாணவரின் தந்தையின் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனின் தந்தையின் GPAY கியூ ஆர் கோடு மூலம் பணத்தை வங்கியில் இருந்து ரூ.40 ஆயிரம் திருடிய கும்பல் குறித்து மாணவனின் தந்தை மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் ADSP.தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் தொழில்நுட்ப ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக முகேஷ்கண்ணோஜியா மகன் ஆசிஸ் கண்ணோஜியா(25) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிஸ் கண்ணோஜியா மீது தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சைபர் கிரைம் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

