பனையபட்டி அருகே குட்கா பொருள் விற்றவர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த கண்ணனூரை சேர்ந்தவர் சதீஷ்(35), இவர் பனையப்பட்டியில் உள்ள மளிகைக்கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பனையப்பட்டி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 460 கிராம் மதிப்புள்ள குட்கா பொருளையும் ரூ.920 -யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story

