தந்தை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மகன்

தந்தை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மகன்
X
மதுரையில் முன்னாள் சபாநாயகரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது திருவருவச் சிலைக்கு இன்று (மே.20)மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story