நத்தக்காடையூரில் கார் மரத்தில் மோதி விபத்து தாய் தந்தை மகள் உட்பட மூன்று பேர் பலி

காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து தாய்,தந்தை மகள் 3 பேர் பலி இளைய மகள் படுகாயம் 
காங்கேயம் நத்தக்காடையூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து .மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 3 பேர் பலி. தந்தை ராஜா (46) , தாய் ஜானகி (42),மூத்த மகள் ஹேமிநேத்ரா (15),பலியானார்கள் இளைய மகள் மௌன ஸ்ரீ (10) பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி 1 சிறுமி மட்டும் காயம் அடைந்தது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியானவர்களில் தாய் ஈரோடு அருகே அறச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருவதாகவும் சொந்த ஊர் கேரளா சென்றுவிட்டு காங்கேயம் வழியாக அரச்சலூர் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளதாகவும் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது. மேலும் விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்து ஏராளமான நகைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.
Next Story