கோவை: பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்க பயிற்சி !
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் கால மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இந்த உபகரணங்களைப் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். மாநிலம் முழுவதும் பருவமழை மற்றும் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் காட்சிப்படுத்தப்பட்ட உபகரணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்ததுடன், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் தேவை குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சில உபகரணங்களின் செயல்முறை விளக்கமும் ஆட்சியர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான தயார்நிலையை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்தது.
Next Story



