தாளையாபட்டியில் மகளுடன் மாயமான மனைவி. மனைவியை காணவில்லை கணவன் புகார்.
தாளையாபட்டியில் மகளுடன் மாயமான மனைவி. மனைவியை காணவில்லை கணவன் புகார். கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள தாளையப்பட்டியை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி சீதாலட்சுமி வயது 31. இவர்களது மகன் பிரதாப் வயது 8. சீதாலட்சுமி தனது மகன் பிரதாப்புடன் மே 16ஆம் தேதி தான்தோன்றி மலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. சீதாலட்சுமி வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால்,தனது மனைவியை காணவில்லை என வெள்ளியணை காவல் நிலையத்தில் முனியன் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மகனுடன் மாயமான சீதாலட்சுமியை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story




