பொன்னேரி ரயில் நிலையத்தில் ராட்சத தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டி பயணிகளை பதம் பார்த்தது

X
பொன்னேரி ரயில் நிலையத்தில் ராட்சச தேனீக்கள் பெண் பயணிகள் உள்ளிட்ட 10 ரயில் பயணிகளை விரட்டி விரட்டி கொட்டி பதம் பார்த்தது, அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களையும் ஓடவிட்டு கொட்டி அலற விட்டது : ரயில்வே நிர்வாகம் ராட்சசன் தேன் கூட்டினை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகளை விரட்டி விரட்டி கொட்டியதில் 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் வேப்பமரம் ஒன்றில் கூடு கட்டி இருந்த ராட்சச தேனீக்கள் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் ஏறி செல்ல வந்த பெண் ரயில் பயணிகள் உள்ளிட்ட 10 பேரை விரட்டி விரட்டி கொட்டியது இதில் ராட்சச தேனீக்கள் இடம் இருந்து தப்பிப்பதற்கு அங்கு இருந்தவர்கள் ஓட்டம் எடுத்தனர் அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநரையும் தேனீக்கள் கொட்டியது தேனீக்கள் கொட்டிய ரயில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக அருகிலேயே அரசு மருத்துவமனையில் இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அங்கிருந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு 10 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பயணிக்க கூடிய பொன்னேரி ரயில் நிலையத்தில் மரங்களில் கூடுகட்டி உள்ள ராட்சச தேனீக்கள் ரயில் பயணிகளையும் நடந்து செல்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் விரட்டி விரட்டி கொட்டி வருவதும் இதனால் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதும் தொடர்கதை ஆகி வருவது வேதனளிப்பதாகவும் எனவே ராட்சச தேனீக்களை ரயில்வே நிர்வாகம் அல்லது பொன்னேரி நகராட்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கருத்தில் கொண்டு உடனடியாக அகற்றிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
Next Story

