கோவை: பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு !

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவிலின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவிலின் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த வினோத வழிபாடு சுற்றுவட்டார பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த 18-ஆம் தேதி துவங்கிய விழாவில், மகாலட்சுமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் மற்றும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் உச்சகட்டமாக, இன்று நடைபெற்ற தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் வழிபாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலின் பூசாரி அருள் வந்து, மேளதாளங்கள் முழங்க, அருள் வந்து ஆடியவாறு பூஜை செய்யப்பட்ட தேங்காயை ஒவ்வொரு பக்தரின் தலையிலும் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இந்த வினோதமான வழிபாட்டைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் கூடிய பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இந்த நூதன நேர்த்திக்கடன், பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பையும், ஆன்மீக உணர்வையும் ஏற்படுத்தியது.
Next Story