கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்

கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்
X
கொடைரோடு அருகே டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மின் கம்பத்தின் மீது மோதி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் சதீஸ் (22). இவரது நண்பா் சுதா்சன் (19). இவா்கள் இருவரும் பணி நிமித்தமாக சுங்கச்சாவடி வரை சென்று விட்டு மீண்டும் நிலக்கோட்டை நோக்கி காரில் வந்தனா். அப்போது, கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூரில் பள்ளிவாசல் அருகே வந்தபோது காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா், அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதுடன், சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள்ளும் புகுந்தது. அப்போது மின் கம்பத்திலிருந்த வயா்கள் காரின் மீது விழுந்தன. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த இருவரும் உயிா் தப்பினா். மேலும் மின் வயா்கள் சாலையில் விழுந்ததால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இதுகுறித்து அம்மைநாயக்கனூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Next Story