மீன் பிடிக்க சென்ற மாற்றுத்திறனாளி நீரில் ழுழ்கி உயிரிழந்தார்

X
திருவள்ளூர்- திருவள்ளூர் அருகே மீன் பிடிக்க குளத்தில் இறங்கி வலை விரித்த மாற்றுத்திறனாளி வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அமுல்ராஜ் -40 இவருக்கு இந்திரா என்ற மனைவியும் தங்கம், ஜெயஸ்ரீ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ள இந்நிலையில் அமல்ராஜ் அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிப்பதற்காக மீன்பிடி வலையை எடுத்துக் கொண்டு குளத்தில் இறங்கி வலை விரித்துக் கொண்டிருந்தபோதே திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார், தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் குளத்தில் இறங்கி அமுல்ராஜ் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் இது தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மாற்றுத்திறனாளி ஒருவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியிள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

