சங்கத் தலைவரை தாங்கிய முன்னாள் சங்கத் தலைவர் கைது

சங்கத் தலைவரை தாங்கிய முன்னாள் சங்கத் தலைவர் கைது
குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தலைவரை தாக்கிய முன்னாள் சங்க தலைவர் கைது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியால் பரபரப்பு பூந்தமல்லி அடுத்த குன்றத்தூர் அருகே வழுதலம்பேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதன் குமார் ராய்(44), இவர் குரோம்பேட்டையில் புத்தகக் கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது இவர் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் சங்க தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் இந்த குடியிருப்பின் முன்னாள் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வருகிறார் இவர் தனது மகன்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்த பொருட்களை எடுக்க முயன்றதாகவும் இந்த தகவல் தெரிந்ததும் சதன்குமார் ராய் பொருட்களை எடுக்க வேண்டாம் என தடுக்க சென்ற போது சத்தியமூர்த்தி அவரது மகன்களும் சேர்ந்து சதன்குமார் ராயை இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதாகவும் இதில் காயமடைந்த சதன்குமார் ராயை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே சத்தியமூர்த்தி இந்த அடுக்குமாடி குடியிருப்பின் சங்க தலைவராக இருந்து வந்ததாகவும் தற்போது நடந்த சங்கத் தேர்தலில் சத்தியமூர்த்தி தோற்ற நிலையில் சதன் குமார் ராய் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் இதனால் அவர் வாங்கி வைத்திருந்த பொருட்களை சங்க அலுவலகத்திலிருந்த எடுக்க வந்தபோது அதனை எடுக்க கூடாது என தடுத்ததில் தகராறு ஏற்பட்டு தாக்கியது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர் .இதை அடுத்து சத்தியமூர்த்தியைய் குன்றத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அங்கு அவரை நீதிபதிகள் ஜாமீனில் விடுவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் சங்கத் தலைவரை தாக்கிய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story