உடற்பயிற்சி கூடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

உடற்பயிற்சி கூடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
X
உடற்பயிற்சி கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, இளைஞர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 'அம்மா' பூங்கா உள்ளது. இந்த பூங்கா, 2018ம் ஆண்டில், 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு, உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதை, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை உள்ளன. இந்த பூங்காவை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் தினமும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதிலிருந்த உடற்பயிற்சி உபகரணங்களில் பெரும்பாலும் திருடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம் இயங்காமல் இருப்பதால், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், உடற்பயிற்சி கூடம் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. எனவே, உடற்பயிற்சி கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story