கோவை: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் !

கோவை: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் !
X
திருப்பூரிலிருந்து வால்பாறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூரிலிருந்து வால்பாறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி 60 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து, பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் 33-வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது பொள்ளாச்சி நகர தி.மு.க. செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story