கொடுவிலார்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கொடுவிலார்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
X
கைது
பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.19) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கொடுவிலார்பட்டி சுடுகாடு அருகே முத்து கருப்பன் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 66 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முத்து கருப்பன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story