கோவை: கணவரை கண்டுபிடித்துத் தரக்கோரி மனைவி புகார்!

கோவை: கணவரை கண்டுபிடித்துத் தரக்கோரி மனைவி புகார்!
X
குவைத் நாட்டில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து மாயமான தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
குவைத் நாட்டில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து மாயமான தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் நேற்று கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். சிங்காநல்லூரைச் சேர்ந்த உஷாகுமாரி (38) அளித்த மனுவில், தனது கணவர் சீனிவாசன் (45) கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வருவதாகவும், மே 5 ஆம் தேதிக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சீனிவாசன் பணிபுரிந்த நிறுவனம், அவர் புதிய நிறுவனத்தில் சேர்ந்ததாகவும், அது குறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், சக ஊழியர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது கணவருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் தவிப்பதாக உஷாகுமாரி வேதனையுடன் கூறியுள்ளார். தனது கணவரைக் கண்டுபிடித்துத் தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு உஷாகுமாரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story