ராயப்பன் பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கியவர் கைது

X
இராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.19) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சுருளிப்பட்டி பெரியாற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஈஸ்வரன் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

