குமரி அரசுமருத்துவ கல்லூரியில் போராட்டம்

குமரி அரசுமருத்துவ கல்லூரியில் போராட்டம்
X
பிரசவத்தில் குழந்தை இறந்ததால்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம்  கீழத் தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி ராதிகா (19). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ராதிகா கர்ப்பிணியாகி  நேற்று 19ஆம் தேதி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு ஸ்கேன் செய்து, பின்னர் குழந்தை நன்றாக இருக்கிறது அட்மிட் ஆகுங்கள் என கூறியுள்ளனர்.       இந்த நிலையில் திடீரென இரவில் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று இரவு பிரசவத்தில்  குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.      மேலும்  குழந்தை வயிற்றுக்குள் இறந்து மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  குடும்பத்தினர் இரவில் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.       சுரேஷ் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் . எனவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகம், போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடந்தது.      இன்று காலை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் கோப குமார்  தலைமையில் நிர்வாகிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  போலீஸ்சார்  குவிக்கப்பட்டனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story