ஆரல்வாய்மொழி : நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவ சந்துரு மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு ரஷிகா ( 18)என்ற மகள் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவில் பானுமதியும் ரஷிகாவும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு ரஷிகா தனது அறைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை தனது மகள் நேரமாகியும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பானுமதி மகள் ரஷிகா படுத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ரஷிகா தனது அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவல் தூக்கிட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலறினார். இதுகுறித்து செண்பகராமன் புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரல்வாய்மொழி போலீசருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? குடும்பப் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

