சிறுவபுரி கோவிலில் அன்னதான திட்ட விரிவாக்கம் : எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவாக்கத்தை பொன்னேரி எம்எல்ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்
திருவள்ளூர்: பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவாக்கத்தை பொன்னேரி எம்எல்ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அன்னதான திட்டம் விரிவாக்கத்தை இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார் உணவு வழங்கி தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பின்னர் பக்தர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் செவ்வாக்கிழமைகளில் 500 பேருக்கு வழங்கப்பட்ட அன்னதானம் 2 ஆயிரம் நபர்களாக அதிகரிக்கப்பட்டது மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 பேருக்கு வழங்கப்பட்ட அன்னதானம் 500 நபர்களாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது
Next Story