பொன்னேரியில் தூர்ந்த நான்கு வாய்க்கால்களை சீர்படுத்தி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும்

X
அரியலூர் மே.20- தமிழ்நாடு விவசாயிகள் சங்க விரிவடைந்த மாவட்டக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் வரப்பிரசாதம் தலைமை வகித்தார். இதில் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், CPIM மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சங்கத்தின் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், ஒன்றிய தலைவர் மகேந்திரன், ஒன்றிய பொருளாளர் தனவேல், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் இளவரசன், ஒன்றிய நிர்வாகிகள் பெரியசாமி, ராமமூர்த்தி, செயராமன், ல.துரைராஜ் திருமானூர் ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், காமராஜ், சுந்தரமூர்த்தி, செந்துறை வட்ட நிர்வாகிகள் சீமான், செல்வராசு, தா. பழுர் வேம்பு, பல்கீஸ் ராஜேந்திரன் ராமச்சந்திரன் பாலன் என பலரும் கலந்து கொண்டனர். இப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பொன்னேரி, சுக்கிரன் ஏரி, கண்டரா தித்தம் ஏரி, பாண்டியன் ஏரி, உட்கோட்டை விளாங்குளம் மற்றும் உள்ள குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி பாசன வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைப்பெறும் ஜமாபந்தியில் விவசாயிகளின் நிலப்பட்டா குளறுப்படி இல்லாமல் வழங்கிட லஞ்சம் பெறாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொன்னேரியில் உள்ள நான்கு வாய்க்கால்களும் தூர்ந்துபோய் இருப்பதால் சீர்படுத்தி பாசன வசதி விவசாயிகளுக்கு தண்ணீர் தர வேண்டும். 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் முதியோர் உதவி தொகை கிடைத்திட வேண்டும். மேலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். கிராமங்களில் மே 31க்குள் சங்க உறுப்பினர் பதிவு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. .இறுதியில் பெரியசாமி நன்றி கூறினார்.
Next Story

