“நான் முதல்வன்“ உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

X
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கள்ளழகர் மேல்நிலைப்பள்ளியில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிக் கனவு 2025 நிகழ்ச்சி திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, நத்தத்தில் இன்று நடத்தப்படுகிறது. நத்தம் பகுதியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகளவில் உள்ளனர். அவர்களிடையே உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இங்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நத்தம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்க அனுமதி அளித்துள்ளார்கள். இந்த ஆண்டே கல்லுாரி தொடங்கப்படவுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிரபாவதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

