கானை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

X
விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையில் நனைந்து சேதமடைந்தன.மழைநீரில் நனைந்த நெல் மூட்டைகளை பிரித்து, உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மீதமுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க, பிளாஸ்டிக் தார்பாலின் மூலம் மூடி வைத்து வருகின்றனர்.கடந்த 3 மாதங்களாக நுாற்றுக்கணக்கான விவசாயிகளின் உழைப்பால் உருவான நெல், கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக, அங்கு அடுக்கி வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story

