நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!

நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.!
X
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்ட கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.பின்னர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்கி பணிக்கொடை வழங்க வேண்டும் மத்திய அரசின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்,
8 மணி நேர வேலை உள்ளிட்ட போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி,பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தணிக்கையாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
Next Story