திருச்சுழி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டாரஸ் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி நரிக்குடி போலீசார் விசாரணை

திருச்சுழி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டாரஸ் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி நரிக்குடி போலீசார் விசாரணை
X
திருச்சுழி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டாரஸ் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி நரிக்குடி போலீசார் விசாரணை
திருச்சுழி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டாரஸ் லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. உடலை கைப்பற்றி நரிக்குடி போலீசார் விசாரணை ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் முனிச்செல்வம்(24). இவர் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனையகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று முனிச்செல்வம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்வதற்காக நரிக்குடி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முனிச்செல்வம் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நரிக்குடி - பார்த்திபனூர் சாலையில் கிளவிக்குளம் விலக்கு அருகே உள்ள சாலை வளைவில் முனிச்செல்வம் திரும்பிய போது திருச்சுழியில் இருந்து பரமக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் மீது முனிச்செல்வம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்ந விபத்தில் பலத்த காயம் அடைந்த முனிச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நரிக்குடி காவல் நிலைய போலீசார் முனிச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story