திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
தெற்கு ஆந்திரா - வட தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் சாரல் முதல் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது கடந்த ஒரு மாத மேலாக திருவள்ளூரில் வெப்பம் கொளுத்தி எடுத்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சில இடங்களில் விட்டுவிட்டு சாரல் முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சுழல் நிலாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திருவள்ளூரில் கடந்த மூன்று நாட்களாக காலை மாலை நேரங்களில் விட்டு விட்டு சாரல் முதல் மிதமான மழை பெய்து வருகிறது , இன்று மாலை திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பத்தூர் பேரம்பாக்கம் செவ்வாப்பேட்டை ,வேப்பம்பட்டு, திருமழிசை உள்ளிட்ட இடங்களில் சாரல் முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது
Next Story








