விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.*

விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.*
X
வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நீர்வரத்து கால்வாயை அடைத்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கடப்பாகுடி கண்மாயை சுற்றி 182 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த கண்மாய்க்கு வாழவந்தான் குளம், நடுவகுளம் வழியாக தண்ணீர் வருவதற்கான நீர் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மையப் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தடுப்பு சுவர் அமைத்துள்ளதால் சுமார் 20 அடி அகலம் இருந்த கால்வாய் தற்போது ஐந்து அடி வரை அகலம் குறைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை ரத்து செய்ய நீர்வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story