முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

X
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மண்டவாடி ஊராட்சி, பெரியமண்டவாடி கிராமத்தில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சின்னமண்டவாடி முதல் பெரியமண்டவாடி வரையிலான 3.40 கி.மீட்டர் துாரம் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட சாலை மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) பொன்னுவேல், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், வட்டாட்சியர் சஞ்சைகாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

