முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

X
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமையில் இலங்கையில் நடந்த ஈழப்போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பாரத், அருண் விஜய், பாதவிநாயகர், காளிதாஸ், ஹரிஹரன், விஜய், தொண்டரணி சிவன் கருப்பன், வேடசந்தூர் வெங்கடேஷ், ஐயப்பன், திண்டுக்கல் சையது அசாருதீன், கிளமெண்ட், முருகானந்தம், மனோகர், பூங்காளி, வடமதுரை சந்தோஷ், குஜிலியம்பாறை பாண்டியன், எரியோடு செந்தில் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

