மகா முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தத்தில் அமைந்துள்ள மகா முத்து மாரியம்மன் கோவில் 57-வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 24- ஆம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பித்தளைப்பட்டி அருகே குடகனாற்றில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வானவேடிக்கை மேளதாளத்துடன் சாமி ஆடியபடி பிள்ளையார்நத்தத்தில் உள்ள மகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். புதன்கிழமை 11 மணி அளவில் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு புராண நாடகம் நடைபெறுகிறது. திருவிழாவில், ஆத்தூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் மற்றும் பிள்ளையார்நத்தம் இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story

