குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்
X
அருவிகளில் மிதமான தண்ணீா்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் நிலவியதன் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மேற்கு தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பேரருவி, ஐந்தருவியில் இன்று அதிகாலை முதல் தண்ணீா் விழத் தொடங்கியது. மலையில் பெய்த கனமழை காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலை குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தண்ணீா் வரத்து அதிகரிக்காததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் நான்கு கிளைகளில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
Next Story