வெள்ளகோவில அருகே பைக் மீது கார் மோதி பெண் பலி

வெள்ளகோவில அருகே பைக் மீது கார் மோதி பெண் பலி
X
வெள்ளகோவில அருகே பைக் மீது கார் மோதி பெண் பலி காவல்துறை விசாரணை
தாராபுரம் தாலுகா குளத்துப்பாளையம் அருகில் உள்ள குருக்கள் பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 59). இவர் கடந்த 12-ந் தேதி தனது கணவர் ராமசாமி, பேத்தி அனுஸ்ரீயுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளகோவில் காங்கேயம் சாலை ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சரஸ்வதி மட்டும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் என்பதால் உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த அருண்குமார் மீது இன்ஸ்பெக்டர் எஸ்.ஞானப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக் டர் மணிமொழி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story