வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வை

X
குமரி மாவட்டம் பள்ளியாடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கிள்ளியூர் வட்டம் பள்ளியாடி அருகே பட்டணங்கால் பிரதான கால்வாய் நெடுகை 33/900 கி.மீ அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நான்கு வழிச்சாலை பணிக்காக பட்டணங்கால்வாயை உடைத்து தொட்டிப்பாலம் அமைக்கும் பணி பார்வையிடப்பட்டது. மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் பணி துவங்கப்பட்டது. மேலும் பாசன வசதிக்காக பட்டணங்கால்வாயில் நீர் விநியோகம் செய்ய வேண்டியிருப்பதால் ஜீன் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்குமாறு திட்ட இயக்குநர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமெனவும், நடைபெற்று வரும் பணிகள் தரமானதாகவும், விரைந்து பணிகளை முடித்திட துறை சார்ந்த அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் வேல்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெங்கின் பிரபாகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

